1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (21:40 IST)

பதக்க மங்கைகளுக்கு கேல் ரத்னா விருது

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய பெண்மணிகளுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.


 

 
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
 
தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பெண்கள் வால்ட் பிரிவில் இந்தியாவில் வரலாறு சாதனை படைத்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். 
 
சாக்‌ஷி மாலிக் இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை பெற்று இந்தியாவிற்கு நம்பிக்கை ஊட்டினார்.
 
பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு மேலும் பதக்கத்தை உறுதி செய்ததுடன், இந்தியாவிற்கு பெருமையையும் தேடி தந்துள்ளார்.
 
ஆகையால் இந்த மூன்று பெண்மணிகளுக்கும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.