1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (17:11 IST)

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது மத்திய அரசு.

கடந்த 2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில்  கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த தடகளவீரர்  மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

இதையொட்டி அவரைச் சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அளித்துள்ளது.