திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (19:07 IST)

டாஸ் வென்று வித்தியாசமான முடிவு எடுத்த ராஜஸ்தான் கேப்டன்..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 37-வது போட்டி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சங் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
 
ஐபிஎல் தொடரில் பெரும்பாலான அணிகள் டாஸ் வென்றால் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்த நிலையில் ராஜஸ்தான் கேப்டன் வித்தியாசமாக பேட்டிங் தேர்வு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து ராஜஸ்தான் அணி வீரர்கள் இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியல் பொறுத்தவரை சென்னை அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகள் மூன்றாம் இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி ஜெயித்தால் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva