செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (15:47 IST)

பந்து ஸ்டம்ப்பில் பட்டும் விழாத பைல்ஸ் – அதனால் மாறிய ஆட்டத்தின் முடிவு!

நேற்று ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

ஐபிஎல் 2020 தொடரின் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் ராகுல் திவேட்டியா. நேற்றைய போட்டியிலும் கடைசி நேரத்தில் அதிரடியில் புகுந்த அவர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறவைத்தார். இடையில் ஒரு பந்தில் அவர் இறங்கி ஆட முயன்ற போது பந்தை மிஸ் செய்தார். அந்த பந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவின் காலில் பட்டு ஸ்டம்பில் மோதியது.

அப்போது பைல்ஸ் ஒரு முறை துள்ளி மீண்டும் ஸ்டம்புகளின் மேலேயே உட்கார்ந்து கொண்டது. பைல்ஸ் விழாததால் ராகுல் திவேட்டியா விக்கெட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர்தான் அவர் அதிரடியில் புகுந்து சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக அடித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.