வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (07:45 IST)

கத்தார் உலகக்கோப்பை: 3ஆம் இடம் கூட கிடைக்காமல் மொரோக்கோ ஏமாற்றம்!

Football world cup
கடந்த சில நாட்களாக உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோத இருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நடந்த 3ஆம் இடத்திற்கு உரிய போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் மோதின
 
இந்த போட்டியில் வெல்லும் அணி 3வது இடத்தை பெறும் என்ற நிலையில் இரு அணிகளும் ஆவேசமாக விளையாடின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து குரோஷியா முன்னேறிய நிலையில் மொரோக்கோ ஒரு கோல் மட்டுமே போட்டது
 
இன்னும் ஒரு கோல் அடித்து சமன் செய்வதற்காக அணி கடைசி வரை போராடியும் கோல் எதுவும் அடிக்க முடியாமல் மொரோக்கோ அணி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து மூன்றாம் இடம் கிடைக்காமல் அந்த அணி ஏமாந்த நிலையில் குரோஷிய அபாரமாக வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. 
 
Edited by Siva