ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இறுதி போட்டியில் பி.வி.சிந்து தோல்வி!
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இதில் இந்தியாவின் நட்சத்திர வீரராகனை பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் சாம்பியன் பட்டத்தை பெரும் வாய்ப்பை இழந்தார்.
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிட்டன் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதில் லீக் போட்டிகளில் இந்தியாவின் பிவி சிந்து மிக அபாரமாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இறுதிப்போட்டியில் அவர் இந்தோனேசியா வீராங்கனை விரிகோரியா என்பவரிடம் விளையாடிய நிலையில் 8-21, 8 - 21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து அவர் ஸ்பெயின் மாஸ்டர் சர்வதேச பேட்மிட்டன் போட்டியின் சாம்பியன் பட்டத்தை இழந்தார்.
பிவி சிந்துவின் தோல்வி இந்திய பேட்மிண்டன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva