புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (23:09 IST)

68 ரன்களில் சுருண்டது டெல்லி: எட்டே ஓவரில் ஆட்டத்தை முடித்தது பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடியபோது வெறும் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இந்த நிலையில் இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய டெல்லி அணி வெறும் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.



 


இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 17.1 ஓவர்களில் 67 ரன்களுக்கு 10 விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆண்டர்சன் அடித்த 18 ரன்களே அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இந்நிலையில் வெறும் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் 7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்ரி 68 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுக்கள் எடுத்த பஞ்சாப் அணியின் சந்தீப் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.