செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (19:28 IST)

கடைசி பந்து வரை சென்ற த்ரில் போட்டி.. சிஎஸ்கே பரிதாப தோல்வி..!

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி பந்தியில் மூன்று ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் அந்த மூன்று ரன்கள் அடித்து பஞ்சாப் அணி நான்கு விக்கெட்டுக்க்ள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து இருநூறு ரன்கள் எடுத்தது. 201 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி முதல் 6 ஓவர்களின் நல்ல தொடக்கத்தை கொடுத்தது. அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன்களை கட்டுப்படுத்தினாலும் கடைசி நேரத்தில் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடியது.
 
கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் என்ற நிலையிலும் கடைசி பந்தில் மூன்று ரன்கள் என்ற நிலையிலும் இருந்த பஞ்சாப் அணி கடைசி பந்தில் திரில் ஆக மூன்று ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து பஞ்சாப் அணியை தற்போது 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva