Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது புனே

செவ்வாய், 16 மே 2017 (23:46 IST)

Widgets Magazine

கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிக்கட்டமாக இன்று முதலாவது பிளே ஆப் போட்டி மும்பையில் நடைபெற்றது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் புனே அணி பேட்டிங்கில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புனே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. கடைசி இரண்டு ஓவர்களில் தோனியின் அதிரடியால் அந்த அணி 42 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன்னிலும் சிம்மன்ஸ் 5 ரன்களிலும், ராயுடு டக் அவுட்டும் ஆகினர். இதனால் கடைசி வரை தத்தளித்து வந்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் புனே அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது பிளே ஆப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மும்பை மீண்டும் மோதவுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

முதல் விக்கெட்டுக்கு 320 ரன்கள்! மகளிர் கிரிக்கெட்டில் மகத்தான சாதனை

ஒரு பக்கம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கிளைமாக்ஸை எட்டியுள்ள நிலையில் இன்னொரு பக்கம் இந்திய ...

news

ஐபிஎல் 2017: பிளே ஆஃப் சுற்றில் நுழைந்த அணிகள் எவை எவை? ஒரு பார்வை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் மும்பை, ...

news

வாழ்வா சாவா முக்கிய போட்டியில் பஞ்சாப் பரிதாபம்: அசத்திய புனே

ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் புனே அணிகள் மோதின. இந்த ...

news

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி. புனே பரிதாபம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய போட்டியில் புனே அணி கடைசி ஒரு ஓவரில் 25 ரன்கள் ...

Widgets Magazine Widgets Magazine