1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:33 IST)

தொடர்ந்து சொதப்பும் புஜாரா… ஆட்டம்காணும் மூன்றாம் இடம்!

சமீபகாலமாக இந்திய அணியின் சுவர் புஜாரா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய தூண் என்றால் அது புஜாராதான். சமீபத்தில் நடந்த ஆஸி தொடரில் அவர் உடல் முழுவதும் பந்துகளால் அடிவாங்கி நின்ற போட்டியே அதற்கு சாட்சி. ஆனால் இப்போது புஜாராவுக்கே ஆப்பு வைக்க கோலி எண்ணிவிட்டதாக சொல்லப்படுகிறது. 34 வயதாகும் புஜாராவுக்கு மாற்று வீரர்களை தயார் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் தன் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் விதமாக அவர் விளையாடவில்லை. கடந்த சில போட்டிகளாகவே அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். அணியில் இளம் வீரர்கள் திறமையோடு வாய்ப்புக்குக் காத்திருக்கின்றனர். அதனால் இப்படியே தொடர்ந்தால் புஜாராவின் இடம் கேள்விக்குறியாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.