1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (13:48 IST)

எனது கனவை சிதைத்த அரிசி கஞ்சியும் ஊறுகாயும்: வேதனைப்படும் பி.டி.உஷா

பி.டி.உஷா இந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்பட்டவர். ஆனால், 1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை இழந்தார். 
பதக்கத்தை இழந்தது குறித்து தற்போதும் வருத்தப்படும் அவர் சமீபத்தைய பேட்டியில் அதற்கான காரணத்தை பகிர்ந்துக்கொண்டார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு...
 
அமெரிக்க உணவுகளை சாப்பிட்ட பழக்கம் எனக்கு கிடையாது. போட்டிக்கு செல்லும் முன்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிராமத்தில் அமெரிக்கா உணவு மட்டும்தான் கிடைக்கும் என்று என்னிடம் யாரும் கூறவில்லை. 
 
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிராமத்தில் எனக்கு அரசி கஞ்சியுடன் ஊறுகாய்தான் உணவாக வழங்கப்பட்டது. அந்த ஊறுகாயை நாங்கள் கடுமாங்கா அச்சார் என்று அழைப்போம். அத்துடன் ப்ரூட் ஸ்லைஸ் வழங்கப்பட்டது. 
 
எந்தவித ஊட்டச்சத்து நிறைந்த சப்போர்ட் உணவு இல்லாமல் அரசி கஞ்சி மட்டுமே தரப்பட்டது. இதனால் கடைசி 35 மீட்டரில் என்னுடைய எனர்ஜி லெவலை நிலைநிறுத்த முடியாமல் போனது. இது என்னுடைய பெர்மான்ஸை பாதித்து, பதக்கத்தை கைநழுவ செய்தது என தெரிவித்துள்ளார். 
 
தற்போது 54 வயதாகும் பிடி உஷா கேரளா மாநிலத்தில் பயிற்சி மையம் தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.