ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (17:07 IST)

டிராவிட் என்றாலே எனக்கு பயம்தான்… இளம் வீரர் பகிர்ந்த ரகசியம்!

இந்திய அணியில் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் பிருத்வி ஷா பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டை பார்த்தாலே தனக்கு எப்போதும் பயம்தான் எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள பிருத்வி ஷா தனது இடத்துக்காக போராடி வருகிறார். இந்நிலையில் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் அவர் இருந்த போது பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டைப் பார்த்தாலே தனக்குப் பயம் எனக் கூறியுள்ளார். மேலும் ‘டிராவிட் எப்போதும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பார். அதனால் அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கும். ஆனால் போட்டி நேரம் தவிர மற்ற நேரங்களில் நட்பாகப் பழகுவார்.

அவரின் பயிற்சிக் காலத்தில் எந்தவொரு வீரரின் பேட்டிங் ஸ்டைலையும் அவர் மாற்றவில்லை. சில திருத்தங்களை மட்டுமே சொல்வார். போட்டியை எஞ்சாய் செய்து விளையாட வேண்டும் எனக் கூறுவார். எதிரணியின் வியூகங்களை எப்படி கையாள வேண்டும். அதற்கு ஏற்ப எப்படி தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் அதிகம் சொல்லிக் கொடுப்பார்.’ எனக் கூறியுள்ளார்.