Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐபிஎல் 2017: பிளே ஆஃப் சுற்றில் நுழைந்த அணிகள் எவை எவை? ஒரு பார்வை


sivalingam| Last Modified திங்கள், 15 மே 2017 (01:01 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் மும்பை, புனே, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிளே ஆப் சுற்றில் வரும் 16ஆம் தேதி முதல் இரண்டு இடங்களை பிடித்த மும்பை மற்றும் புனே அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.


 


அதேபோல் 3வது மற்றும் 4வது இடங்களை பிடித்த ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் வரும் 17ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் போட்டியில் மோதவுள்ளது. முதல் பிளே ஆஃப் சுற்றில் தோல்வி அடைந்த அணியும், இரண்டாவது பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் வரும் 19ஆம் தேதி பெங்களூரில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி முதல் பிளே ஆப் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்

மே 21ஆம் தேதி நடைபெறும் இந்த இறுதிபோட்டியில் வெற்றி பெறும் அணியே ஐபிஎல் 2017ஆம் ஆண்டின் சாம்பியன் பட்டத்தை தட்டி செல்லும்


இதில் மேலும் படிக்கவும் :