முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் முடிவெடுத்த பாகிஸ்தான் படுதோல்வி.. வங்கதேசம் அபார வெற்றி..!
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கிய வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது.
அதன் பின்னர் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சில் மிக அபாரமாக விளையாடி 565 ரன்கள் குவித்தது. ரஹீம் 191 ரன்கள் எடுத்து நூலிழையில் இரட்டை சதத்தை மிஸ் செய்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் படு மோசமாக விளையாடி 146 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில் வங்கதேச அணி வெற்றி பெற 30 ரன்கள் மட்டுமே தேவை இருந்தது. அந்த ரன்களை வங்கதேச அணியும் வெறும் 6.3 ஓவர்களில் எடுத்ததை அடுத்து அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்து சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva