புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (19:58 IST)

இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் நிதான நாட்டம்

இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் நிதான நாட்டம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் இன்று இங்கிலாந்தில் உள்ள செளதாம்டன் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது 
இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் அபித் அலி களமிறங்கினார்கள். ஷான் மசூத் ஒரே ஒரு ரன்னில் அவுட்டாகியதால் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அடைந்தது. இதனை அடுத்து கேப்டன் அசார் அலி 20 ரன்களுக்கு அவுட்டானார் 
 
ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகள் மடமடவென விழுந்து விட்டதால் பாகிஸ்தான் அணியினர் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்து வருகின்றனர். தொடக்க ஆட்டக்காரரான அப்பித் அலி 49 ரன்களும் பாபர் அசாம் 2 ரன்களுடனும் தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றனர்
 
பாகிஸ்தான் அணி 34 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்துள்ளது என்பதும், இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது