1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (08:16 IST)

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி.. 5 விக்கெட்டுக்களை இழந்து நியூசிலாந்து திணறல்..!

வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான  இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த ஆறாம் தேதி ஆரம்பித்த நிலையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் மட்டுமே எடுத்து பேட்டிங் செய்ய திணறி வருகிறது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  பிலிப்ஸ், சாண்ட்னர் ஆகியோர்  மிக அபாரமாக பந்துவீசி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை அடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய தொடங்கியபோது மளமளவென முன்னணி பேட்ஸ்மேன் விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் விழுந்தன. லாதம், கான்வே, வில்லியம்சன், நிக்கோலஸ், ஆகியோர்கள் விக்கெட்டுகள் மளமளவென்று வீழ்ந்து விட்டதை அடுத்து தற்போது 5 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் மட்டுமே எடுத்து நியூசிலாந்து பேட்டிங் செய்ய முடியாமல் திணறி வருகிறது.

இன்று 3வது நாள் ஆட்டம் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva