Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நியூசிலாந்தின் அபார பந்துவீச்சு: இந்தியா போராடி தோல்வி


sivalingam| Last Modified சனி, 4 நவம்பர் 2017 (22:24 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா, இன்று ராஜ்கோட்டில் நடைபெற்ற 2வது டி-20 போட்டியில் போராடி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.

 


முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 196 ரன்கள் குவித்தது. முண்ட்ரோ மிக அபாரமாக விளையாடி 108 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான தவான் 1 ரன்னிலும், ரோஹித் சர்மா 5 ரன்களிலும் அவுட் ஆகினர். இருப்பினும் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் தல தோனி ஓரளவிற்கு போராடினர். இருப்பினும் இந்திய அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 40 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முண்ட்ரோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி வரும் 7ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :