Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரே விளம்பரத்தில் லைஃப் செட்டில்: கோலிக்கு அடித்த அதிஷ்டம்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 22 பிப்ரவரி 2017 (12:42 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனான விராட் கோலியை சர்வதேச விளையாட்டு உபகரண நிறுவனமான பூமா 8 ஆண்டுகளுக்கு ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 

 
 
இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஒரே விளம்பரத்தில் இத்தனை கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். 28 வயதாகும் கோலி, தனது முழு கிரிக்கெட் வாழ்க்கையில் பூமாவின் விளம்பர தூதராகவே இருக்க வேண்டிவரும் என்பது இதில் கவனிக்கத்தக்கது. 
 
பொதுவாக இவ்வளவு நீண்ட ஒப்பந்தத்தை கிரிக்கெட் வீரர்களுடன் எந்த நிறுவனமும் செய்வதில்லை. ஆனால் பூமா இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்த தொகை ஆண்டு வாரியாக பிரித்து கொடுக்கப்படும். 
 
அதாவது, கோலிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.12 கோடி கிடைக்கும். ஏற்கனவே உசேன் போல்ட், பீலே, மரடோனா போன்ற விளையாட்டு ஜாம்பவான்களுடன் பூமா ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :