வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (07:35 IST)

ஓடும்போது கீழே விழுந்தும் தங்கம் வென்ற வீராங்கனை!

ஓடும்போது கீழே விழுந்தும் தங்கம் வென்ற வீராங்கனை!
ஒலிம்பிக் போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை ஒருவர் ஓடும்போது கீழே விழுந்தும் அதன் பின்னர் எழுந்து மன உறுதியுடன் ஓடி தங்கம் வென்றார் என்ற தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது விறுவிறுப்பாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இதில் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது
 
இதில் நெதர்லாந்து வீராங்கனை சிஃபான் ஹசன் என்பவர் கலந்து கொண்டார். அவர் ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென சக வீராங்கனையோடு மோதி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு சில நொடிகள் தாமதமானது
 
இருப்பினும் நெதர்லாந்து வீராங்கனை சிஃபான் ஹசன் மன உறுதியுடன் மீண்டும் எழுந்தார் அப்போது அவர் கடைசி இடத்தில் இருப்பதை பார்த்தார். இருந்தும் மனம் தளராமல் அபாரமாக ஓடி தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு வாழ்த்துக்கள் தற்போது குவிந்து வருகிறது
 
ஓடும்போது சக வீராங்கனையுடன் மோதி கீழே விழுந்த போதிலும் களத்தில் தடுமாறினாலும் இலக்கில் தடுமாறாமல் தங்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது