வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (07:39 IST)

போட்டியெல்லாம் களத்துக்குள்ளதான்… தங்கள் செயலால் ரசிகர்களின் இதயங்களை வென்ற நீரஜ் & அர்ஷத் நதீம்!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவு இறுதிப் போட்டி நேற்றிரவு நடந்தது. இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தையும், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

தங்கப்பதக்கம் வென்ற அர்ஷத் ஒலிம்பிக்கில் இதுவரை யாரும் சாதிக்காத 92.97மீ ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். நீரஜ் சோப்ரா தன் இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் இவர்கள் இருவரும் செய்த செயல்தான் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. போட்டி முடிந்த பின்னர் வெற்றி பெற்ற வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியோடு போஸ் கொடுத்தனர். அப்போது அர்ஷத்துக்கான பாகிஸ்தான் கொடி தயாராகவில்லை. அதனால் அவர் தனித்து நின்றார். அப்போது அவரை அழைத்து தன்னருகில் நிற்கவைத்து போட்டோ எடுத்துக் கொண்டார் நீரஜ். இது சம்மந்தமான காணொளி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.