1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (19:04 IST)

ஐபிஎல் 2023: டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் எடுத்த அதிரடி முடிவு..!

Rohit Sharma
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 16வது போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிவிக்கிடையே நடைபெறும் நிலையில் இன்றைய போட்டியில் சற்று முன் டாஸ் போடப்பட்டது. 
 
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றதை அடுத்து அவர் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து டெல்லி அணி இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்கி பேட்டிங் செய்ய உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது என்பதும், அதேபோல் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் டெல்லி அணி தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு முதல் வெற்றியாக இந்த தொடரில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றியை பெறுவது மும்பை அணியா அல்லது டெல்லி அணியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran