வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 10 மே 2023 (07:43 IST)

பொளந்து கட்டிய சூர்யகுமார் யாதவ்.. ஒரே வெற்றியால் 3வது இடத்தில் மும்பை..!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடியதை அடுத்து அந்த அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த மும்பை அணி தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் விளையாடிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 199 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட் ஆனாலும் சூரியகுமார் யாதவ் 35 பந்துகளில் 83 ரன்கள் அடித்து தனது அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். அவர் 7 பவுண்டர்களும் 6 சிக்ஸர்களும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்றைய போட்டியில் 16.3 ஓவர்களில் மும்பை அணி இலக்கை எட்டிவிட்டதால் ரன் ரேட் அதிகமாகி உள்ளது என்பதும் குஜராத் சென்னையை அடுத்து மூன்றாவது இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva