1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (22:16 IST)

குறைந்த கட்டணம் 1200 ரூபாயா? என்னங்கடா நடக்குது சேப்பாக்கம் மைதானத்தில்?

இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகரமாக இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்ட நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடன் சொந்த மண்ணில் மோதவிருக்கின்றது. ஐந்து ஒருநாள் போட்டி, மூன்று டி-20 போட்டி ஆகிய போட்டி நடைபெறவுள்ள நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது



 
 
இந்த நிலையில் இந்த போட்டிக்கு புதிய டிக்கெட் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியை காரணம் காட்டி குறைந்தபட்ச டிக்கெட் ரூ.1200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரூ.2400, ரூ.4800, ரூ.8000, ரூ.12,000 என டிக்கெட் கட்டணம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
 
இதற்கு முன்னர் குறைந்த கட்டணம் ரூ.750 என்று இருந்த நிலையில் ஜிஎஸ்டி காரணமாக ரூ.450 உயர்த்தப்பட்டுள்ளதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கட்டணங்களை குறைந்தபட்சம் ரூ.1200 என்று இருக்கும் கட்டணத்தையாவது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு விடப்பட்டுள்ளது.