புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (11:41 IST)

31 ஆண்டுகால வர்ணனை பணிக்கு ஓய்வு அறிவித்தார் மைக்கேல் ஹோல்டிங்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட்டர் மைக்கேல் ஹோல்டிங் வர்ணனைப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 60 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 102 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் மைக்கேல் ஹோல்டிங். அசுரத்தனமான தனது பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களின் கண்களில் பயத்தைக் காட்டியவர் இவர். சர்வதேசப் போட்டிகளில் 391 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டி இருந்து 31 வருடங்களாக கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இப்போது வர்ணனை பணியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.