1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 31 மே 2022 (16:52 IST)

நான் தோல்வி அடைந்ததற்கு மாதவிடாய் வலி தான் காரணம்: டென்னிஸ் வீராங்கனை

china tennis
நான் தோல்வி அடைந்ததற்கு மாதவிடாய் வலி தான் காரணம்: டென்னிஸ் வீராங்கனை
நான் தோல்வி அடைந்ததற்கு மாதவிடாய் வலி தான் காரணம் என சீன டென்னிஸ் வீராங்கனை வேதனையுடன் தெரிவித்துள்ளார் 
 
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் விளையாடிய சீன வீராங்கனை ஜெங் ஜின்வென் என்பவர் தோல்வி அடைந்தார் 
 
இந்த தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தது குறித்து அவர் கூறிய போது மாதவிடாய் வயிற்று வலி காரணமாக என்னால் சரியாக விளையாட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் அடுத்த பிறவி ஒன்று இருந்தால் அது ஆணாக இருக்க விரும்புகிறேன் என்றும் அப்படி இருந்தால் இந்த வலியால் அவதிப்பட வேண்டியது அல்ல என்றும் அவர் தெரிவித்தார் 
 
மாதவிடாய் காரணமாக தான் தோல்வி அடைந்ததாக சீன வீராங்கனை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது