திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2020 (09:33 IST)

மரடோனாவுக்கு வெற்றியை காணிக்கையாக்கிய மெஸ்ஸி! – வைரலாகும் புகைப்படம்!

நேற்று நடந்த லா லிகா போட்டியில் விளையாடிய கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது வெற்றியை மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு சமர்பணம் செய்துள்ளார்.

உலக பிரபலமான அர்ஜெண்டினா கால்பந்து வீரர் டியாகோ மரடோனா கடந்த சில நாட்கலுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று ஸ்பெயினின் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியும், ஒசாசுனா அணியும் மோதின.

இதில் ஆரம்பம் தொட்டே பார்சிலோனா கை ஓங்கியிருந்தது. ஒசாசுனாவை ஒரு கோல் கூட எடுக்க விடாமல் பார்சிலோனாவின் ப்ரெய்த்வெய்ட், க்ரெய்ஸ்மென் மற்றும் குவடின்ஹோ ஆகியோர் வரிசையாக கோல்களை எடுத்தனர். இந்நிலையில் ஆட்டம் முடிய இருந்த கடைசி தருவாயில் பார்சிலோனாவின் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனால் மெஸ்ஸி நான்காவது கோலை அடித்தார்.

பின்னர் தனது டீ சர்டை கழற்றி உள்ளே தான் அணிந்திருந்த மரடோனாவின் டீ சர்ட்டை காட்டிய மெஸ்ஸி வானத்தை நோக்கி கைகளை நீட்டி தனது வெற்றியை மரடோனாவுக்கு சமர்பித்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.