1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (19:47 IST)

கொல்கத்தா வெற்றியால் முதலிடத்தில் தொடரும் சிஎஸ்கே!

கொல்கத்தா வெற்றியால் முதலிடத்தில் தொடரும் சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் 41வது போட்டி இன்று கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் ஸ்மித் 39 ரன்களும் ரிஷப் பண்ட் 39 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 128 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ரானா 36 ரன்கள் எடுத்தார் என்பதும், சுனில் நரேன் 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சுனில் நரேன் தேர்வு செய்யப்பட்டார். 
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டெல்லி அணி இன்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் சென்னை அணியின் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது