திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 மே 2024 (06:46 IST)

கொல்கத்தா- ராஜஸ்தான் போட்டி ரத்து.. ஆடாமல் ஜெயிச்ச ஐதராபாத்..!

நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

நேற்று கவுஹாத்தியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக தாமதமானது. அதன் பின்னர் இரவு 10 மணிக்கு மேல் 5 ஓவர் போட்டி நடத்த திட்டமிட்ட நிலையில் திடீரென மீண்டும் மழை பெய்ததால் வேறு வழி இன்றி போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு காரணமாக கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் 17 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ஹைதராபாத் அணியை விட ரன் ரேட் குறைவாக இருந்ததால் அந்த அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதனை அடுத்து ஹைதராபாத் அணி ஆடாமலேயே இரண்டாவது இடத்தை பெற்றது என்பது முதல் குவாலிபயர் 1 போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே தான் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva