தோனி இருக்கும் போது எனக்கென்ன? கோலி ஓபன் டாக்!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:46 IST)
இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தாலும், தோனி இருக்கும் வரை நான் கத்துக்குட்டி தான் என இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

 
 
இந்தியா வந்த இங்கிலாந்து அணி, மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றது. 
 
இரு அணிகள் மோதிய மூன்றாவது டி-20 போட்டி பெங்களூருவில் நடந்தது. இப்போட்டிக்கு கோலி கேப்டனாக இருந்த போதும் களத்தில் அதிக பரபரப்பாக காணப்பட்டார் தோனி.
 
இதுகுறித்து கோலி கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் நான் முழுமையான கேப்டனாக மாறிவிட்டேன். ஆனால் ஒருநாள் மற்றும் போட்டியின் தன்மையை கணிக்க முடியாது. 
 
டி20 போட்டியில் சகால் திணறடித்த அடுத்த ஓவரை பாண்டியாவுக்கு வழங்க நான் திட்டமிட்டேன். ஆனால் பும்ராவை அழைத்தது தோனி தான். நெஹ்ராவும் இதே தான் சொன்னார். அதனால் சீனியர்களின் முடிவுக்கே விட்டுவிட்டேன். இந்திய அணியில் தோனி இருக்கும் வரை நான் கத்துக்குட்டி தான் என தெரிவித்துள்ளார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :