1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 8 நவம்பர் 2017 (20:29 IST)

ஏன் தோனி ஒருவரை மட்டும் விமர்சிக்கிறீர்கள்? கோலி பாய்ச்சல்!!

தோனியின் பேட்டிங் குறித்தும் அவரது உடற்தகுதி குறித்தும் எழும் விமர்சனங்களுக்கு இந்திய அணி கேப்டன் கோலி பதிலடி தந்துள்ளார். 


 
 
டி20 போட்டியின் வெற்றிக்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோலி பின்வருமாறு பேசினார். தோனி முழு உடல் தகுதியுடன் அனைத்து பரிசோதனைகளிலும் தேர்வு பெறுகிறார். களத்தில் அணிக்காக எப்படியெல்லாம் பங்காற்ற முடியுமோ அப்படியெல்லாம் பங்காற்றுகிறார். 
 
தனது ஆட்டத்தில் கடினமாக உழைக்கிறார். அணியில் அவரது பங்கு என்ன என்பது அவருக்குப் புரியும். ஆனால் அதை அனைத்து போட்டியிலும் நிரூபிப்பது சாத்தியமில்லை.
 
ஒரு பேட்ஸ்மேனாக நான் 3 ஆட்டங்களில் சரியாக ஆடவில்லையென்றால் கூட யாரும் என்னை எதுவும் சொல்லவதில்லை. ஏனென்றால் நான் இன்னும் 35 வயதை தாண்டவில்லை.
 
இலங்கை சுற்றுப்பயணத்திலும், ஆஸ்திரேலிய தொடரிலும் தோனி நன்றாகத்தான் பேட்டிங் செய்தார். நியூசிலாந்த் தொடரை பொறுத்தவரை தோனிக்கு ஆடும் வாய்ப்பும் சரியாக அமையவில்லை. 
 
எப்பொழுதும் ஏன் தோனி ஒருவரை மட்டும் விமர்சிக்கிறீர்கள்? இதில் நியாயமில்லை. டெல்லி போட்டியில் தோனி ஒரு சிக்ஸர் அடித்தார். ஆட்டம் முடிந்ததும் அதை 5 முறை போட்டுக் காட்டினார்கள். 
 
ஆனால் ஒரு போட்டியில் ஆடவில்லையென்றால் அவர் உயிருக்கு விலை பேசுகிறோம். மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். தோனி மிக புத்திசாலியானவர். அவரது ஆட்டம், உடல் தகுதி எந்த நிலையில் இருக்கிறது என்பது அவருக்கு புரியும் என கோலி கோபமாக பேசினார்.