ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (17:00 IST)

தோனியின் சாதனையை சமன் செய்த கோலி!!

ஒரு நாள் போட்டி தொடர்களில் தொடர்ந்து ஒன்பது வெற்றிகளை பெற்று தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார் கோலி.


 


இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடர் வெற்றிகள் மூலம் தோனியின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். 
 
2008- 2009 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக ஒன்பது ஒரு நாள் போட்டிகலில் வெற்றி பெற்றது. இந்த தொடர் வெற்றி தோனியின் சாதனையாக இருந்தது.
 
இந்நிலையில், தற்போது கோலி தலைமையிலான இந்திய அணியும் ஒன்பது ஒரு நாள் போட்டிகளி தொடர் வெற்றியை பெற்றதால், கோலி தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
 
இதே போல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர்களில் 2 வது இடத்தில் இருந்த டோனியை நேற்று ரோகித் சர்மா முந்தினார். இவர் 1403 ரன்னை தொட்டார். தோனி 1342 ரன் எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.