திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (08:50 IST)

ஹாட்ரிக் விக்கெட் தட்டிய கேஷவ் மகாராஜ்!

தென்னாப்பிரிக்க சுழல் பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேஷவ் மகாராஜ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார். 60 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்க வீரர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் பவுலர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கேஷவ் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 129 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.