காரைக்குடி காளையின் அதிரடியில் வீழ்ந்த திருவள்ளூர் வீரன்ஸ்


sivalingam| Last Modified வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (04:02 IST)
கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு அமோக  வரவேற்பு இருந்து வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியும் , திருவள்ளூர் வீரன்ஸ் அணியும் மோதின,


 
 
முதலில் பேட்டிங் செய்த திருவள்ளூர் வீரன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி காளை அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரீகாந்த் அனிருதா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்
 
இந்த வெற்றியின் மூலம் காரைக்குடி அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. திருவள்ளூர் அணி தோல்வி அடைந்தபோதிலும் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :