1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 21 ஆகஸ்ட் 2021 (20:34 IST)

ஜோஸ் பட்லர் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை: காரணம் இதுதான்!

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் மீதி போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மீதி உள்ள ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஜோஸ் பட்லர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோஸ் பட்லர் மனைவிக்கு விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதாகவும் மனைவியின் பிரசவத்தின் போது பட்லர் அருகில் இருக்க விரும்புவதாகவும் அதனால் மீதி உள்ள போட்டியில் விளையாட தன்னால் முடியாது என்று அவர் தெரிவித்ததாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பினர் தெரிவித்துள்ளனர் 
 
இந்நிலையில் ஜோஸ் பட்லருக்கு பதிலாக பிலிப்பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது