Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரிசர்வ் டே கண்டிப்பாக தேவை: ஐபிஎல் போட்டி குறித்து ஷாருக்கான் ஆலோசனை


sivalingam| Last Modified வெள்ளி, 19 மே 2017 (05:30 IST)
நேற்று முன் தினம் இரண்டாவது பிளே ஆஃப் போட்டியின்போது முதல் இன்னிங்ஸ் முடிவடைந்தவுடன் மழை குறுக்கிட்டதால் 6 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டு அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.


 


இந்த நிலையில் தனது அணி வெற்றி பெற்றபோதிலும் ஓவர் குறைத்து விளையாடும் முறை மாற்றப்பட வேண்டும் என்று கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மழை நின்றவுடன் 6 ஓவர் போட்டி ஆரம்பிக்கும் போது நள்ளிரவு மணி 1 ஆகிவிட்டதாகவும், போட்டி முடிவடைய 1.30 ஆகிவிட்டதாகவும் இதனால் ரசிகர்கள் வீட்டிற்கு செல்ல சிரமப்பட்டதாகவும் கூறிய ஷாருக்கான், இதுபோன்ற நேரங்களில் போட்டியை மறுநாள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் அதாவது கண்டிப்பாக ரிசர்வ் டே வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஷாருக்கானின் கோரிக்கையை ஐபிஎல் நிர்வாகம் பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :