1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (13:32 IST)

டாஸ் வென்ற விராத் கோஹ்லி எடுத்த அதிரடி முடிவு: முழுமையாக தொடரை வெல்லுமா?

டாஸ் வென்ற விராத் கோஹ்லி எடுத்த அதிரடி முடிவு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று இரு நாட்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை அடுத்து சற்று முன் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
 
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் களத்தில் இறங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய விளையாடும் 11 பேர் அணியில் இரு அணிகளிலும் இருக்கும் வீரர்கள் விபரங்கள் பின்வருமாறு:
 
இந்திய அணி: கே.எல்.ராகுல், தவான், விராத் கோஹ்லி, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், நடராஜன் சாஹல்,
 
ஆஸ்திரேலிய அணி: பின்ச், வேட், ஸ்மித், மேக்ஸ்வெல், ஷார்ட், ஹெண்ட்ரிக்ஸ், சாம்ஸ், அபாட், ஸ்வெப்சன், டை, ஜாம்பா,
 
இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் 3-0 என்ற கணக்கில் மொத்தமாக முழுமையாக தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது