1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 டிசம்பர் 2017 (20:02 IST)

பழி தீர்த்த இந்தியா; ரோகித் அதிரடியில் கலங்கிய இலங்கை

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

 
இந்தியா - இலங்கை அணிகள் இடையே இன்று ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்தது.
 
கேப்டன் ரோகித் சர்மா ருத்திரதாண்டவம் ஆடினார். 153 பந்துகளில் 208 ரன்கள் குவித்தார். இது அவருக்கு மூன்றாவது இரட்டை சதமாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 
 
இதையடுத்து 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலே தடுமாறியது. மெல்ல மெல்ல விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மேத்யூஸ் மட்டும் களத்தில் நின்று போராடினார். மற்ற வீரர்கள் ஒருபக்கம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
 
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 251 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இலங்கை அணி சார்பில் மேத்யூஸ் சதம் விளாசினார். இந்திய அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.