1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 டிசம்பர் 2021 (07:23 IST)

செஞ்சுரியன் டெஸ்ட்: வெற்றியை நெருங்கியதா இந்திய அணி?

செஞ்சுரியன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 327 ரன்கள் முதல் இன்னிங்சிலும், 174 ரன்கள் இரண்டாவது இன்னிங்சிலும் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 197 ரன்களில் ஆட்டம் இழந்ததால் அந்த அணி வெற்றி பெற 305 ரன்கள் என்ற இலக்கை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி தரும் என்பதும் தென் ஆப்பிரிக்க அணி 211 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கி விட்டதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது