1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (17:48 IST)

தொடர் மழை எதிரொலி: இந்தியா-நெதர்லாந்து பயிற்சி ஆட்டம் ரத்து..!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஐந்தாம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
ஏற்கனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் கெளஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிவிக்கிடையிலான போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்த நிலையில் இந்த போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
 
மழை நேரத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதால் இந்த போட்டியில் மழை தான் பிரதானமாக விளையாடுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran