1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 15 ஜூலை 2018 (10:18 IST)

2வது ஒருநாள் போட்டி - இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது.
நேற்றைய இந்தியா - இந்தியா அணிகளுக்கான 2வது ஒருநாள்  போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.  ரூட் அபாரமாக விளையாடி 113 ரன்கள் குவித்தார். மேலும் வில்லே 50 ரன்களும், கேப்டன் மோர்கன் 53 ரன்களும், ராய் 40 ரன்களும் குவித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 322 ரன்கள் குவித்தது
323 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் ரோகித் 15 ரன்னிலும் ஷிகர் தவான் 36 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய கோலி 46 ரன்களும், ரெய்னா 45 ரன்களில் அவுட்டாகினர். தோனி 37 ரன்னில் அவுட்டானார். 
 
பின் களமிறங்கிய வீரர்கள் யாரும் சரியாக விளையாடாததால் இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கிறது.