1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 மார்ச் 2023 (08:20 IST)

இன்று இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்.. தொடர் வெற்றி கிடைக்குமா?

ind vs aus1
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற உள்ளது. கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பதும், கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் 
 
அதனை அடுத்து மார்ச் 17 முதல் இரு அணிகளுக்கும் இடையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva