ஜோஹர் கோப்பை ஹாக்கி: இந்த ஆண்டும் இந்திய அணி பங்கேற்காது


bala| Last Modified சனி, 15 ஏப்ரல் 2017 (12:34 IST)
மலேசியாவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கும் ஆண்களுக்கான ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டி வருகிற அக்டோபர் 22ம் தேதி துவங்குகிறது. கடந்த போட்டியிலும் இந்திய அணி இதில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டும்  இந்திய அணி பங்கேற்காது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

 

2014-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த ஹாக்கி போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள், இந்திய ரசிகர்களை நோக்கி அருவறுக்கத்தக்க வகையில் சைகை செய்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்கவில்லை. எனவே அந்த அணி வருத்தம் தெரிவிக்காதவரை தெரிவிக்காத வரை இந்திய ஆக்கி அணி பாகிஸ்தான் அணி பங்குபெறும் போட்டிகளில் பங்கேற்காது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :