1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:06 IST)

11 ரன்களில் 4 விக்கெட்டுக்கள்: இந்தியா 244க்கு ஆல்-அவுட்!

11 ரன்களில் 4 விக்கெட்டுக்கள்: இந்தியா 244க்கு ஆல்-அவுட்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது
 
நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி இன்று தனது இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது. இன்றைய போராட்டத்தில் 90 வது ஓவரில் ஏழாவது விக்கெட்டையும், 91 ஆவது ஓவரில் எட்டாவது விக்கெட்டையும் 93வது ஓவரில் 9வது விக்கெட்டையும், 94 ஆவது ஓவரில் பத்தாவது விக்கெட்டையும் இழந்தது
 
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 11 ரன்களில் 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்ததால் மொத்தம் 244 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆட்ட முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் கோஹ்லி, இன்று துரதிஸ்டவசமாக ரன் அவுட் ஆனதே இந்த போட்டியின் திருப்பதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய உள்ளது