வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (12:45 IST)

அனைத்திலும் கலக்கும் இந்தியா கோட்டை விடும் ஒரு இடம் - 2020இல் சரி செய்து கொள்ளுமா ?

கடந்த 10 ஆண்டுகளாக உலகக் கிரிக்கெட்டில் கோலோச்சி கொண்டிருக்கும் இந்திய அணி பீல்டிங்கில் மட்டும் இன்னும் மோசமான பார்மையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 275 சர்வதேசப் போட்டிகளை வென்றுள்ள் இந்திய அணி இந்த தசாப்தத்தின் சிறந்த அணியாக விளங்குகிறது. தோனி மற்றும் கோலி கேப்டன்சியின் இந்திய அணி சிறப்பாக வீறுநடை போட்டுக் கொண்டு இருக்கிறது.

ஆனாலும் இந்திய எணி என்னும் பெரிய கப்பலில் ஒரு சிறிய ஒட்டை இருக்கிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்து விஷயங்களிலும் அணி வலுவாக இருந்தாலும் ஃபீல்டிங்கில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறது. கடந்த  6 சர்வதேச போட்டிகளில் மட்டும் 21 கேட்ச்களை மிஸ் செய்துள்ளது.

இதுதான் இப்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவாகியுள்ளது. தற்போதைய இந்திய அணியில் கோலி, ஜடேஜா போன்றவர்கள் சிறப்பாக பீல்டிங் செய்தாலும் மற்றவர்கள் நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதேபோல தோனிக்கு மாற்றாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் அதிகளவில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்குகளை கோட்டைவிட்டு வருகிறார். வரப்போகும் 2020 ஆம் ஆண்டில் இந்திய அணி அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒரு துறையாக பில்டிங் இருக்கிறது.