திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2023 (16:55 IST)

92 ரன்களில் 4 விக்கெட்டுக்கள்: தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் திணறும் இந்திய பேட்ஸ்மேன்கள்..!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்று பந்துவீச்சை தென்னாப்பிரிக்க அணி தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது.  

கேப்டன் ரோகித் சர்மா  ஐந்து ரன்களில் அவுட் ஆக அதனை அடுத்து சுப்மன் கில் இரண்டு ரன்களில் அவுட்டானார். இதனை அடுத்து ஜெயஸ்வால் 17 ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களில் அவுட் ஆகினர்.

தற்போது விராட் கோலி 34 ரன்கள் எடுத்தும், கே.எல்.ராகுல் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தென்னாப்பிரிக்கா அணியை பொருத்தவரை ரபடா 2 விக்கெட்டுக்களையும் பர்கர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சு காரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்கவும் முடியாமல் விக்கெட்டுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்

Edited by Siva