செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2017 (11:19 IST)

விராத் கோஹ்லி உள்பட மூவர் சதம்: இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி பார்சல்?

நாக்பூரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

நேற்று தமிழக வீரர் முரளி விஜய் மற்றும் புஜாரே ஆகியோர் சதமடித்த நிலையில் சற்றுமுன்னர் கேப்டன் விராத் கோஹ்லி சதமடித்துள்ளார். எனவே இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் மூன்று வீரர்கள் சதமடித்துள்ளனர்.

இந்திய அணி சற்றுமுன் வரை 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 395 ரன்கள் குவித்துள்ளது. விராத் கோஹ்லி 116 ரன்களும், புஜாரே 142 ரன்களும் அடித்துள்ளனர். இந்தியா தற்போது 190 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது