1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (07:57 IST)

ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா..!

கடந்த சில நாட்களாக சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியை 4-0  என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய ஆறு நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த தொடரில் இந்தியா இதுவரை 5 போட்டிகளில் விளையாடி நான்கில் வென்று உள்ளது என்பதும் ஒரு போட்டியை டிரா செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
தற்போது 13 புள்ளிகள் உடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்பதும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்திய அணி அபாரமாக பாகிஸ்தான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதை அடுத்து இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva