1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (17:31 IST)

மகளிர் ஆசிய கோப்பை: 80 ரன்களில் சுருண்ட வங்கதேசம்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

கடந்த சில நாட்களாக மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் அரை இறுதி போட்டி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
கேப்டன் சுல்தானா மட்டுமே 32 ரன்கள் எடுத்த நிலையில் 9 வீராங்கனைகள் சிங்கிள் டிஜிட்டில் தான் ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் அணி தரப்பில் ரேணுகா  மூன்று விக்கட்டுகளையும் ராதா யாதவ் மூன்று விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.

இதனை அடுத்து 81 என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணி விளையாடி நிலையில் விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 83 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. வெர்மா 26 ரன்களும் ஸ்மிருதி  மந்தனா 52 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் மூன்று விக்கெட் எடுத்த ரேணுகா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

Edited by Mahendran