திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (17:38 IST)

டி20 உலகக் கோப்பை: அரையிறுதி போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்?

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளை முதல் தொடங்கியுள்ளன
 
நாளை மற்றும் நாளை மறுநாள் அரையிறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் அரை இறுதிப் போட்டியின் போது மழை வந்தால் என்ன நடக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது 
 
ஐசிசி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அரையிறுதி போட்டியில் மழை வந்தால் அடுத்த நாள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் ஒருவேளை அடுத்த நாளும் மழை வந்தால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஒருவேளை நியூசிலாந்து பாகிஸ்தான் போட்டியில் மழை பெய்தால் நியூஸிலாந்து அதிக புள்ளிகள் எடுத்து உள்ளதால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்
 
அதேபோல் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா அதிக புள்ளிகள் பெற்று உள்ளதால் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். 2 அரையிறுதி போட்டிகளில் மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva