செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 1 ஜூலை 2020 (18:58 IST)

ஐசிசி தலைவர் பதவியிலிருந்து சஷாங் மனோகர் ராஜினாமா! அடுத்த தலைவர் யார்?

ஐசிசி தலைவர் பதவியிலிருந்து சஷாங் மனோகர் ராஜினாமா! அடுத்த தலைவர் யார்?
ஐசிசி தலைவர் பதவியிலிருந்து சஷாங் மனோகர் திடீரென ராஜினாமா செய்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி கிரிக்கெட் பிரபலங்கள் இடையே எழுந்துள்ளது
 
ஐசிசி தலைவர் பதவியிலிருந்து சஷாங் மனோகர் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய ஐசிசி தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை துணைத் தலைவராக இருக்கும் இம்ரான் கவாஜா பொறுப்புத் தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் பிசிசிஐ தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலி தான் அடுத்த ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் என பரவலாக ஐசிசி வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. எனவே ஐசிசியின் அடுத்த தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
ஏற்கனவே ஐசிசி தலைவர்களாக ஜக்மோகன் டால்மியா மற்றும் சரத்பவார் ஆகியோர் பதவியேற்றிருந்த நிலையில் மீண்டும் இந்தியர் ஒருவர் ஐசிசி தலைவர் ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்